• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அதிகாரப்பகிர்விற்கான நடவடிக்கைகள் குறித்து ஜப்பானுக்கு இலங்கை அரசாங்கம் தெளிவூட்டல்

இலங்கை

தேசிய நல்லிணக்கம் மற்றும் ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்ப அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்து ஜப்பானிய வெளிவிவகார அமைச்ருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மேலும் 13 ஆவது திருத்தத்தின் கீழ் அதிகாரப்பகிர்வு என்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முன்மொழிவு மற்றும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு குறித்தும் இலங்கை அரசாங்கம் விளக்கமளித்துள்ளது.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதந்துள்ள ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் நேற்றைய தினம் ஊடக சந்திப்பு ஒன்றினை நடத்தியிருந்தார்.

கொழும்பிலுள்ள வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற இந்த சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் அலி சப்ரி இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இருதரப்பு ஒத்துழைப்பு, உட்கட்டமைப்பு வசதிகள், டிஜிட்டல் பொருளாதாரம் ஆகிய துறைகளில் முதலீடு குறித்தும் அவருடன் பேசியதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரம் மீட்சியை நோக்கிய பாதையில் பயணிக்கும் இந்த சந்தர்ப்பத்தில் இலங்கைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான நல்லுறவு மேலும் வலுவடையும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 

Leave a Reply