பொறுமையை சோதித்துவிட்டது இலங்கை: இந்திய ஊடகம் தகவல்
இலங்கையின் மெத்தனப் போக்கை பொறுத்துப் பொறுத்துப் பார்த்த இந் திய அரசு இங்கு இத்தனை மாறுதல் கள் ஏன் என்று நேரிலேயே விளக்கம் கேட்க முடிபு செய்துள்ளது.
இதற்காகவே சிவ் சங்கர் மேனனை கொழும்புக்கு அனுப்பவுள்ளது. இவ் வாறு தமிழ்நாட்டில் இருந்து வெளி யாகும் தினமணி நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் இலங்கை அரசுக்கு எல்லா வகையிலும் உத விகளைச் செய்திருந்தாலும் சமீப காலமாக இந்திய அரசையே அலட் சியப்படுத்துகிறது இலங்கை அரசு. இந்தியாவுடன் செய்துகொண்ட உடன் பாடுகளை ரத்து செய்யவும் கொடுத்த வாக்குறுதிகளைக் காலில் போட்டு மிதிக்கவும் தயாராகி வருகி றது. அத்துடன் சீனாவுடன் மிக நெரு க்கமாகவும் உறவைப் பேண தொட ங்கி விட்டது. பொறுத்துப் பொறுத் துப் பார்த்த இந்திய அரசு இலங்கை யின் போக்கில் இத்தனை மாறுதல் கள் ஏன் என்று நேரிலேயே விளக்கம் கேட்க முடிபு செய்துள்ளது. இதற்கா கவே இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனை இம் மாதம் 29 ஆம் திகதி வெள்ளிக் கிழமை கொழும்புக்கு அனுப்பி வைக் கிறது.
அவர் சனிக்கிழமையும் அங்கு தங்கி இலங்கை அரச தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவார் எனக் குறி ப்பிட்டுள்ளது.மேலும் இலங்கையின் வடக்கில் தமிழர் வசிப்பிடங்களில் அளவுக்கு அதிகமாக இராணுவ வீரர் களைத் தங்கவைத்து பொது மக்க ளை அச்சுறுத்தக் கூடாது.அவர்களை வெளியேற்ற வேண்டும் என்ற ஒப் புக்கொள்ளப்பட்ட விடயத்திலும் அரசு வேண்டுமென்றே மெத்தனம் காட்டுகிறது.அத்துடன் அது குறித்து இந்திய அரசுக்கு தெரிவிக்க வேண் டிய அவசியம் இல்லை என்பதைப் போல நடந்து கொள்கிறது. இராணு வத்தினரின் எண்ணிக்கைçயுயம் குறையவில்லை. குடியியல் நிர்வா கத்தில் இராணுவத்தினரின் ஆதிக்க மும் குறையவில்லை.
தமிழர்களுடைய வீடுகளையும் நில ங்களையும் இலங்கை இராணுவம் தன்வசம் எடுத்துக் கொள்வது வேக மாகவும் அதிக அளவிலும் நடக்கி றது.இது பற்றி எரியும் பிரச்சினை யாக உருவெடுத்து வருகிறது. இந் திய அரசு இனியும் இதைக் கண்டு கொள்ளாமல் இருக்க முடியாது என்ற நிலைமை எற்பட்டு வருகிறது. கிழக்கு மாகாண சபையின் பதவிக் காலம் இன்னும் ஓராண்டு இருக்கி றது என்றாலும் அதையும் கலைத் துவிட வேண்டும் என்று மாகாண முதலமைச்சர் எஸ் சந்திரகாந்தன் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்.இதையும் இந்திய அரசு கவனத்தில் கொண்டு ள்ளது.இலங்கையில் வடக்கிலும் கிழக்கிலும் வசிக்கும் தமிழர்களின் துயர நிலை குறித்து நேரில் அறிய இந்தியத் தூதுவர் சமீபத்தில் விரி வாக சுற்றுப் பயணம் மேற்கொண் டார். அவர் அளித்த அறிக்கைகள் இலங்கையில் என்ன நடக்கிறது என் பதை இந்திய அரசு புரிந்து கொள்ள உதவி வருகிறது.எனவே சிவசங்கர் மேனனின் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது என தினமணி நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.