Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
அரசியல்தீர்வுக்கு பீரிசிடம் அழுத்தம் கொடுக்கப்படும் இந்தியாவின் புதிய வெளிவிவகார அமைச்சர்!
Thursday 1st of November 2012 01:33:31 PM

இந்தியாவின் புதிய வெளிவிவகார அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சல்மான் குர்சித், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிசை நாளை சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.

 

இந்தச் சந்திப்பின் போது, இந்தியா கரிசனை கொண்டுள்ள சிறிலங்காவின் இனப்பிரச்சினைக்கு விரைவாக அரசியல்தீர்வு காணும்படி சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசிடம், இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் அழுத்தம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாக இந்திய செய்தி நிறுவனம் ஒன்று கூறியுள்ளது.

 

அதேவேளை, போரினால், இடம்பெயர்ந்த தமிழ்மக்களின் புனர்வாழ்வு நடவடிக்கைகள் குறித்து இந்தச் சந்திப்பின் போது சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விளக்கமளிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்தியாவில் இன்று ஆரம்பமாகும் இந்தியப் பெருங்கடல் பிராந்திய ஒத்துழைப்பு அமைப்பின் 19வது மாநாட்டுக்குச் செல்லும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சருடனேயே இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் பேச்சு நடத்தவுள்ளார்.

 

கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்தியாவின் மத்திய அமைச்சரவை மாற்றத்தின் போது புதிய வெளிவிவகார அமைச்சராக சல்மான் குர்சித் நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
இன்றைய செய்தி - 22, மே 2013 புதன்கிழமை
செவ்வாய்க்கிழமை திங்கட்கிழமை
ஞாயிற்றுக்கிழமை சனிக்கிழமை
வெள்ளிக்கிழமை வியாழக்கிழமை

 

 
 
Swiz Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark
USA UK Switzerland Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark