Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
அடுத்த பிரதமர் பீரிஸ் - நாமல் ராஜபக்‌ஷவிற்கு நீதி அமைச்சு! - கொழும்பில் கிசு கிசு!
Saturday 29th of September 2012 02:25:01 PM

சிறிலங்காவில் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ள அமைச்சரவை மாற்றத்தின் போது ஜனதிபதி மஹிந்தராஜபக்சவின் மகனான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் நீலப்படை அமைப்பைச் சேர்ந்த சில பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பொறுப்புகள் வழங்கப்படவுள்ளதாகத் தெரிய வருகிறது. இதன்படி நாமல் ராஜபக்ஷவுக்கு நீதியமைச்சு பொறுப்பும் வழங்கப்படவுள்ளது எனவும் கொழும்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.மனுஷ நாயக்கார, சனத் ஜயசூரிய, உதித் லொக்கு பண்டார, லக்ஷ்மன் வசந்த ஆகியோருக்கும் அமைச்சு பொறுப்புகள் வழங்கப்படவுள்ளன. இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினரான சரத் விஜயசேகரவுக்கு சிவில் பாதுகாப்பு அமைச்சு வழங்கப்படவுள்ளது.

 

மேலும் தற்போதைய அமைச்சர்களான மைத்திரிபால சிறிசேன, சுசில் பிரேமஜயந்த் ஆகியோரின் தற்போதைய அமைச்சுகளிலும் மாற்றம் செய்யப்படவுள்ளன. அத்துடன் பிரதமராக தற்போதைய வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் நியமிக்கப்படுவது பெருபாலும் உறுதியாகி உள்ளது என்றும் அந்தச் செய்திகள் தெரிவிக்கின்றன.

 
இன்றைய செய்தி - 25, மே 2013 சனிக்கிழமை
வெள்ளிக்கிழமை வியாழக்கிழமை
புதன்கிழமை செவ்வாய்க்கிழமை
திங்கட்கிழமை ஞாயிற்றுக்கிழமை

 

 
 
Swiz Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark
USA UK Switzerland Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark