Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
இலங்கையில் மனித உரிமைகளுக்கான செயல்திட்டம் உள்ளது! ஆனால் செயற்பாடு இல்லை!
Friday 28th of September 2012 11:07:58 AM
இலங்கையில் மனித உரிமை பிரச்சினைகளில் இன்னும் அந்த நாட்டின் அரசாங்கம் உரியவகையில் செயற்படவில்லை என்று நெருக்கடிகளுக்கான குழு குற்றம் சுமத்தியுள்ளது.ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் அமர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்தநிலையி;ல் அதில் பங்கேற்றுள்ள உறுப்பு நாடுகளின் உறுப்பினர்களுக்கு நெருக்கடிகளுக்கான குழு கடிதங்களை அனுப்பிவைத்துள்ளது.

இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமர்வில் பிரேரணை நிறைவேற்றப்பட்டு 6 மாதங்கள் கடந்துள்ளன. எனினும் இலங்கை அரசாங்கம் மனித உரிமைகளை பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை.

சொந்த நாட்டில் தயாரிக்கப்பட்ட நல்லிணக்க ஆiணைக்குழு அறிக்கை மாத்திரம் வெளியிடப்பட்டுள்ளது. எனினும் அதில் உள்ள விடயங்கள் அமுல்செய்யப்படவில்லை.

இது இலங்கை அரசாங்கத்தின் தீவிரமான கவனயீனத்தை காட்டுகிறது என்றும் நெருக்கடிகளுக்கான குழு சுட்டிக்காட்டியுள்ளது.

போர்க்குற்றங்கள் தொடர்பில் அரசாங்கம் இன்னமும் விசாரணைகளை மேற்கொள்ளவில்லை.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் படையினரின் மீறல்கள் உட்பட்ட விடயங்களை விசாரணை செய்ய இன்னும் சுயாதீனமான அமைப்பு ஒன்று நிறுவப்படவில்லை.

இதற்கு மத்தியில் கடந்த 6 மாதங்களுக்குள் இலங்கையில் காணாமல் போதல் உட்பட்ட மனித உரிமைமீறல் விடயங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

வடக்குகிழக்கில் இராணுவ பிரசனத்தை குறைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. மாறாக இன்னும் அங்கு படையினர் பொதுமக்களின் நிர்வாகங்களில் தலையிடும் போக்கு அதிகரித்து வருகிறது.

வடக்கில் மாகாணசபை தேர்தல்கள் நடத்தப்படவில்;லை. இனப்பிரச்சினை தீர்வு தொடர்ப்pல் அரசாங்கம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடன் பேச்சு நடத்த பின்னடித்து வருகிறது.

எனவே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பிரதிநிதிகள், இலங்கையின் நல்லிணக்க திட்டங்களுக்கு வலியுறுத்தல் விடுக்காமல் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான வலியுறுத்தலை விடுக்கவேண்டும் என்று நெருக்கடிகளுக்கான குழு கோரியுள்ளது.

இந்தநிலையில், இலங்கையின் மனித உரிமைகள் நிலவர மேம்பாட்டை கவனிப்பதற்காக ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதிகளை இலங்கை அனுமதிக்கவேண்டும்.

அத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலக மேலதிகப்பிரதிநிதிகள் இலங்கை நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் நடைமுறையை கவனிக்க அனுப்பப்படவேண்டும் போன்ற செயற்பாடுகளை தற்போது கூடியுள்ள மனித உரிமைகள் பிரதிநிதிகள் உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும் என்றும் நெருக்கடிகளுக்கான குழு கோரியுள்ளது.

 
இன்றைய செய்தி - 25, மே 2013 சனிக்கிழமை
வெள்ளிக்கிழமை வியாழக்கிழமை
புதன்கிழமை செவ்வாய்க்கிழமை
திங்கட்கிழமை ஞாயிற்றுக்கிழமை

 

 
 
Swiz Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark
USA UK Switzerland Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark