Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
மன்னார் மீனவர்களின் விவகாரம் தொடர்பாக-ஜெனீவா பிரதிநிதி இலங்கை விஜயம்.
Monday 24th of September 2012 03:38:05 PM

மன்னார் உப்புக்குளம் மீனவர்களின் விவகாரம் தொடர்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தையடுத்து அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு ௭திராக தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளை அவதானிக்கும் பொருட்டு ஜெனீவாவில் அமைந்துள்ள சர்வதேச பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் தனது பிரதிநிதியொருவரை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது.

 

மேற்கு அவுஸ்திரேலிய சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினரான மார்க் டிரவல் இவ் வழக்கு விசாரணைகளில் அவதானியாகச் செயற்படும் பொருட்டு நேற்றைய தினம் இலங்கையை வந்தடைந்தார். இவர் இன்று திங்கட்கிழமை மன்னார் நீதிமன்றில் இடம்பெறும் வழக்கு விசாரணையின் போது சர்வதேச அவதானிப்பாளராக செயற்படவுள்ளார்.

 

இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், இந்த வழக்கு விசாரணை தொடர்பான தமது முழுமையான அறிக்கையினை ஜெனீவாவில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றிய தலைமையகத்துக்கு சமர்ப்பிக்கவுள்ளதாகக் குறிப்பிட்டார்.

 

தனக்கு ௭திராகத் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணைகளை அவதானிப்பதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் பிரதிநிதிகளை அனுப்பி வைக்குமாறு அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அண்மையில் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 
இன்றைய செய்தி - 19, ஜுன் 2013 புதன்கிழமை
செவ்வாய்க்கிழமை திங்கட்கிழமை
ஞாயிற்றுக்கிழமை சனிக்கிழமை
வெள்ளிக்கிழமை வியாழக்கிழமை

 

 
 
Swiz Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark
USA UK Switzerland Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark