Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
தமிழ்க் கூட்டமைப்பை விரைவில் அழைத்துப் பேசவுள்ளது இந்தியா!
Monday 24th of September 2012 03:20:30 PM

இனப்பிரச்­சி­னைத் தீர்வுக்­காக தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பை விரைவில் அழைத்­துப் பேச இந்தியா திட்டமிட்­டுள்ளது எனத் தகவல்கள் தெரி­விக்கின்றன.தீர்வுக்கு முழுமை­யான பங்களிப்பை வழங்க­வேண்­டும் என்ற அடிப்படை­யில் தமிழ்க் கூட்டமைப்புக்கு இந்தியா அழுத்தம் கொடுக்­கவுள்ளது எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்ளது.இந்தியாவுக்குச் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ஷ­வுடன் இடம்பெற்ற பேச்சு­களை அடுத்து இந்தியா இந்த நிலைப்­பாட்டுக்கு வந்துள்ளது எனக் கூறப்­படுகிறது.

 

இதன் அடிப்படையில் இந்­தியாவுக்கு விரைவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அழைக்கப்படலாம் அல்லது இந்தியத் தரப்பினர் இலங்கையில் வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்­பினரைச் சந்திக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

இதன்போது இலங்கையின் ஜனாதிபதியினால் கூட்டப்­பட்­டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கேற்குமாறு இந்­தியா, கூட்டமைப்பை கேட்கக்­கூடும் என்றும் தகவல்கள் வெளி­யாகியுள்ளன.

 

இதேவேளை, இந்திய பிரத­மரும் இலங்கை ஜனாதிபதியும் டில்லியில் சந்தித்தபோது இரண்­டு நாடுகளுக்கு இடையி­லும் பாது­காப்பு ஒத்துழைப்பை பலப்­படுத்திக் கொள்ள இணங்கிக் கொள்­ளப்பட்டுள்ளது.

 

இதன்போது தமிழகத்தில் இலங்கைப் படையினருக்கு எதிராக இடம்பெற்ற சம்பவங்­கள் தனிப்பட்ட சம்பவங்கள் என்று இந்திய தரப்பில் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

 

இதற்கிடையில், தமிழகத்­தில் இலங்கைப் படையின­ருக்­கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், பிரான்ஸில் இருந்­து செயற்படும் தமிழீழ விடுத­லைப் புலிகளின் உறுப்பி­னரான விநாயகம் என்ற கதிர்­காமத்­தம்பி அறிவழகனால் உரு­வாக்­கப்பட்டுள்ள வலைய­மைப்­பின் மூலமே மேற்கொள்ளப்­பட்­ட­தாக இலங்கை புலனாய்வுத் தரப்­பினர் தெரிவித்துள்ள­னர் எனத் தகவல்கள் தெரி­விக்­கின்றன.

 
இன்றைய செய்தி - 26, மே 2013 ஞாயிற்றுக்கிழமை
சனிக்கிழமை வெள்ளிக்கிழமை
வியாழக்கிழமை புதன்கிழமை
செவ்வாய்க்கிழமை திங்கட்கிழமை

 

 
 
Swiz Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark
USA UK Switzerland Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark