தமிழகத்தின் மீது குற்றம் சுமத்துவதில் அர்த்தமில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் வரையில் இவ்வாறான நெருக்கடிகளை எதிர்நோக்க நேரிடும்.
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும்.
இதுவரையில் இலங்கை விவகாரம் தொடர்பில் தமிழகத்தில் ஆறு பேர் தீக்குளித்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர்.
தமிழ் மக்களின் இதயத் துடிப்பை புரிந்து கொள்ள வேண்டும் என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழக எதிர்ப்பலைகள் தொடர்பில் நாடாளுமன்றில் நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்படுத்த தென்னிந்தியவைச் சேர்ந்த சிலர் முயற்சி!
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்படுத்த தென் இந்தியாவைச் சேர்ந்த சிலர் முயற்சித்து வருவதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களின் பணத்தைப் பெற்றுக் கொண்டு இயங்கி வரும் தமிழக கடும்போக்காளர்கள் சிலரே குழப்பங்களை விளைவித்து வருகின்றனர்.
இந்த நடவடிக்கைகளினால் இரு நாடுகளுக்கும் இடையில் நீண்ட காலகமாக நிலவி வரும் உறவுகளில் விரிசலை ஏற்படுத்த முடியாது.
பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க இந்தியா வழங்கிய ஒத்துழைப்பு பாராட்டப்பட வேண்டும்.
தென் இந்திய தலையீடு காரணமாகவே வடமராட்சி யுத்தத்தை நிறுத்த நேரிட்டது, யுத்தம் முன்னெடுக்கப்பட்டிருந்தால் பாரியளவிhன சொத்துக்கள் மற்றும் உயிர்ச் சேதங்களை தவிர்த்திருக்கலாம்.
புலிகளின் பணத்தைப் பெற்றுக் கொள்ளும் ஒரு சிலர் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் என நியோமல் பெரேரா தெரிவித்துள்ளார்.