Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
ஐ.நா-வின் 'அச்சுறுத்தும் போக்குடைய நாடுகள்' பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கம்!
Wednesday 19th of September 2012 09:43:49 AM
அச்சுறுத்தும் போக்குடைய நாடுகள்' என ஐ.நா பட்டியலிட்டிருக்கும் பதினாறு நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றிருப்பதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கை தகவல் வெளியிட்டுள்ளது.பழிவாங்கும் நோக்குடன் செயல்பட்டுவரும் பட்டியலிடப்பட்டிருக்கும் அந்நாடுகளின் அரசாங்கம் தண்டிக்கப்படாத நிலையிலேயே இருப்பதாக ஐ.நா-வின் அறிக்கை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

இன்னிலையில், இலங்கை உட்பட அல்ஜீரியா, பஹ்ரைன், பெலாரஸ், சீனா, கொலம்பியா, ஈரான், கஜகஸ்தான், கென்யா, லெபனான், மலாவி, ருவாண்டா, சவூதி அரேபியா, சூடான், உஸ்பேகிஸ்தான் மற்றும் வெனிசுலா உள்ளிட்ட நாடுகளும் ஜூன் 2011 முதல் ஜூலை 2012 காலவரையை உள்ளடக்கிய ஐ.நா-வின் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

பழிவாங்கும் நோக்குடனான செயல்பாடுகளும் தனிநபர்கொதிரான அச்சுறுத்தல்களும் தொடர்ந்து பதிவாகிவருவதனையும் மக்கள், அரசு அதிகாரிகளாலும் உயர் மட்ட அதிகாரிகளின் பொது அறிக்கைகளினாலும் அச்சுறுத்தல்களுக்கும் துன்புறுத்தல்களுக்கும் ஆளாக்கப்படுவதனையும் ஐ.நா மனித உரிமை உயர் ஆணையர் நவி பிள்ளை ஐ.நா மனித உரிமை கூட்டத்தில் கருத்துரைத்துள்ளார்.

ஐ.நா மனித உரிமை குழு மற்றும் உலக நாடுகள் ஒன்றுதிரண்டு அப்பாவி மக்களுக்கெதிரான கொலை, கொடுமை, கைது, அச்சுறுத்தல், துன்புறுத்தல் ஆகியவையை முறியடிக்க செயல்முறைகளை வரையறுக்க வேண்டும் எனவும் பழிவாங்கும் மற்றும் அச்சுறுத்தும் நோக்குடனான செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க சீரான மற்றும் திடமான வியூகங்கள் தேவை எனவும் நவநீதம்பிள்ளை வலியுறுத்தியுள்ளார்.

 
இன்றைய செய்தி - 19, ஜுன் 2013 புதன்கிழமை
செவ்வாய்க்கிழமை திங்கட்கிழமை
ஞாயிற்றுக்கிழமை சனிக்கிழமை
வெள்ளிக்கிழமை வியாழக்கிழமை

 

 
 
Swiz Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark
USA UK Switzerland Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark