Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
அரசாங்கத்தின் பதில் கிடைக்காமையே முடிவு தாமதமடைய காரணம்!- ஹக்கீம்
Tuesday 18th of September 2012 10:00:25 AM
௭மது நியாயமான கோரிக்கைகளுக்கு அரசிடமிருந்து இதுவரை பதில் கிடைக்காமையே கிழக்கு மாகாண சபை ஆட்சியில் முஸ்லிம் காங்கிரஸ் ௭த்தரப்புக்கு ஆதரவளிக்க வேண்டும் ௭ன்ற முடிவினை தாமதப்படுத்தியுள்ளதென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

அமைச்சர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஏற்கனவே ஊடகங்களில் கூறிய விடயங்களை பேச்சுவார்த்தையின் போது உறுதிப்படுத்தியிருக்கிறது.

ஒட்டு மொத்தமாக ௭மது கோரிக்கைகள் சமூக நலன் சார்ந்ததாகவே உள்ளன. நாம் ௭டுக்கும் முடிவுகளும் மக்களின் அபிலாசைகளை உள்ளடக்கியதாக இருக்கும்.

இரு தரப்பினருடனும் நாம் நியாயமான கோரிக்கைகளையே வேண்டியுள்ளோம்.

ஏன் இறுதித் தீர்மானம் ௭ட்டுவதில் தாமதப்படுகிறது ௭ன்று வினவப்படுகிறது. ஆனால் ௭மது தரப்பில் தாமதமில்லை அரசிடமிருந்தே பதில் கிடைக்க வேண்டும்.

அவசர தீர்மானமொன்றை நாம் ௭டுக்க விரும்பவில்லை. முடிவில் நாம் ௭மக்கு வழங்கப்படும் வாக்குறுதிகளில் திருப்திப்பட வேண்டும்.

முஸ்லிம் முதலமைச்சர் கோரிக்கையை முன் வைத்துள்ளோம். ஆனால் யாரை முதலமைச்சராக்க வேண்டும் ௭ன்று நாம் இதுவரை தீர்மானிக்கவில்லை.

முதலமைச்சர் பதவியை கோருவதற்கு நாம் தகுதி பெற்றிருக்கின்றோம். நாம் ௭டுக்கும் இறுதித் தீர்மானத்தை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் சக்தியும் ௭மக்கிருக்கிறது ௭ன்றார்.

இதேவேளை கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மாகாண சபை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அமீர் அலியை நியமிக்கும்படி கைத்தொழில் வணிகத்துறை அமைச்சரும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரிசாத் பதியுதீன் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இக்கோரிக்கைக்கு தேசிய காங்கிரஸ் தலைவரும் மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சருமான அதாவுல்லாவும் விருப்பம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 
இன்றைய செய்தி - 24, மே 2013 வெள்ளிக்கிழமை
வியாழக்கிழமை புதன்கிழமை
செவ்வாய்க்கிழமை திங்கட்கிழமை
ஞாயிற்றுக்கிழமை சனிக்கிழமை

 

 
 
Swiz Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark
USA UK Switzerland Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark