Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
என்னைப் பழிவாங்கவே மகனை கைது செய்துள்ளனர்: மேர்வின் சில்வா
Tuesday 18th of September 2012 09:53:18 AM
என்னைப் பழிவாங்கும் நோக்கிலேயே எனது மகனை கைது செய்துள்ளனர் என அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.பெற்றோர் அரசியலில் ஈடுபடுவது தவறில்லை எனவும் பிள்ளைகளை கூடுதலாக பிரபல்யப்படுத்த வேண்டாம். இதனை அனுபவ ரீதியில் நான் தெரிவிக்கின்றேன்.

பொறாமையினால் பாதிக்கப்பட்ட நபர்கள் பெற்றோரிடம் பழிவாங்க முடியாது, பிள்ளைகளை இலக்கு வைக்கின்றார்கள். நான் அந்த நிலைமையையே எதிர்நோக்கி வருகின்றேன்.

சாதாரண ஒருவர் இந்த மோதலில் ஈடுபட்டிருந்தால் அவரைத் தவிர வேறு எவருக்கும் இந்த விடயம் தெரிந்திருக்காது. நான் அமைச்சர் என்ற காரணத்தினால் தேவையற்ற பிரசாரம் வழங்கி, இன்று எனது மகன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பௌத்த மதத்தை வழிபாடு செய்கின்ற காரணத்தினால் கவலைகளையும் வேதனைகளையும் பொருட்படுத்த மாட்டேன். ஜனாதிபதிக்கு என்னைப் பற்றி நன்கு தெரிந்த காரணத்தினால், எனக்கு அமைச்சுப் பதவி வழங்கினார்.

இதனைத் தாங்கிக்கொள்ள முடியாத சிலர் என்னை பழிவாங்க முயற்சிக்கின்றார்கள்.

என்னைப் பழிவாங்கினால் பரவாயில்லை, எனது பிள்ளைகளை பழிவாங்க வேண்டாம் என பொறாமைகாரர்களிடம் கோருகின்றேன் என மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

 
இன்றைய செய்தி - 19, ஜுன் 2013 புதன்கிழமை
செவ்வாய்க்கிழமை திங்கட்கிழமை
ஞாயிற்றுக்கிழமை சனிக்கிழமை
வெள்ளிக்கிழமை வியாழக்கிழமை

 

 
 
Swiz Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark
USA UK Switzerland Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark