Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home роЗродрпИ роОройродрпБ роорпБродро▓рпН рокроХрпНроХрооро╛роХрпНроХрпБ родрооро┐ро┤ройрпН ро╡ро┤ро┐роХро╛роЯрпНроЯро┐ INFORMATION PAGE
 
 

 

 
கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைக்க யாருக்கு ஆதரவு? Ц முஸ்லிம் காங்கிரசின் முடிவு இன்று
Tuesday 11th of September 2012 05:03:58 PM

கிழக்கு மகாணசபையில் ஆட்சியமைப்பதற்கு எந்தக் கட்சிக்கு ஆதரவளிப்பது என்பதை முடிவு செய்ய, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று காலை முக்கிய கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது.கிழக்கு மாகாணசபைக்கு நடந்த தேரதலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 14 ஆசனங்களைப் பெற்றுள்ளது. 

தேசிய சுதந்திர முன்னணியின் ஒரு ஆசனத்துடன் சேர்த்து கிழக்கு மாகாணசபையில், அதன் பலம் 15 ஆக உயர்ந்துள்ளது. 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 11 ஆசனங்களை வென்ற நிலையில் ஐதேகவின் 4 உறுப்பினர்களின் ஆதரவையும் பெற்றுள்ளது. இதன் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பலமும் 15 ஆக உயர்ந்துள்ளது. 

இருதரப்புமே சமநிலை ஆசனங்களுடன் ஆட்சியமைக்கப் போட்டியிடும் நிலையில், தீர்மானிக்கும் சக்தியாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இருந்து வருகிறது. 

இந்தநிலையில் இதுவரை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் யாருக்கு ஆதரவளிப்பது என்று முடிவு செய்யவில்லை. 

ஆனால், கிழக்கு மாகாணசபைக்கு தெரிவு செய்யப்பட்ட ஏழு உறுப்பினர்களையும் இன்று கொழும்பில் தனது இல்லத்தில் நடைபெறும் முக்கிய கலந்துரையாடலில் பங்கேற்குமாறு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்  அழைப்பு விடுத்துள்ளார். 

இதன்போது கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களின் கருத்தை அறிந்து எந்தக் கட்சிக்கு ஆதரவளிப்பது என்று முடிவு செய்யப்படும் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் ஊடக இணைப்பாளர் ஹபீஸ் தெரிவித்துள்ளார். 

 
இன்றைய செய்தி - 19, மே 2013 ஞாயிற்றுக்கிழமை
சனிக்கிழமை வெள்ளிக்கிழமை
வியாழக்கிழமை புதன்கிழமை
செவ்வாய்க்கிழமை திங்கட்கிழமை

 

 
 
Swiz Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark
USA UK Switzerland Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark