Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
தேர்தலின் பின்னர் அமைச்சரவை மாற்றம் பதவிக்கு வேறொருவரை நியமிக்க மஹிந்த எதிர்ப்பு
Saturday 1st of September 2012 10:42:59 AM

 

அடுத்த 8 ஆம் திகதி மாகாணசபைத் தேர்தல் முடிந்த கையேடு அமைச்சரவையில் மாற்றம் செய்வதற்கு அரசு தீர்மானித்துள்ளது. இதன்படி ஒக்டோபர் முதல் வாரத்தில் இந்த அமைச்சரவை மாற்றம் நடைபெறும். முக்கியமான ஏழு அமைச்சர்கள் மாற்றப்படுவர் என்று அரச  தரப்புத் தகவல்கள் இன்று  தெரிவித்தன.
வெளிவிவகாரம், வர்த்தகம், சுகாதாரம் ஆகிய அமைச்சுகளுக்குப் புதிய அமைச்சர்களாக எவரை நியமிப்பது என்பது குறித்து அரச உயர்மட்டம் தற்போது ஆராய்ந்து வருகிறது எனக் கூறப்படுகிறது.
எதிர்வரும் எட்டாம் திகதி நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலின் முடிவுகளின் பிரதிபலிப்பும் இந்த அமைச்சரவை மாற்றத்தில் தாக்கத்தைச் செலுத்துமென எதிர்பார்க்கப்படுகின்றது. 
இதற்கிடையில் உடல்நலமற்ற நிலையில் ஸ்ரீலங்காவின் பிரதமர் டி.எம்.ஜயரட்ன இருப்பதால் அவருக்குப் பதிலாக  வேறொருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசின் மூத்த உறுப்பினர்கள் விடுத்த வேண்டுகோளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிராகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 
இன்றைய செய்தி - 21, மே 2013 செவ்வாய்க்கிழமை
திங்கட்கிழமை ஞாயிற்றுக்கிழமை
சனிக்கிழமை வெள்ளிக்கிழமை
வியாழக்கிழமை புதன்கிழமை

 

 
 
Swiz Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark
USA UK Switzerland Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark