Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
இந்திய - சிறிலங்கா கடலோரக் காவல்படைகளின் தளபதிகள் புதுடெல்லியில் சந்திப்பு
Tuesday 28th of August 2012 11:42:56 AM

இந்திய - சிறிலங்கா கடலோரக் காவல்படைகளுக்கு இடையிலான நான்கு நாள் பேச்சுக்கள் நேற்று புதுடெல்லியில் ஆரம்பமாகியுள்ளன.இந்தப் பேச்சுக்களை நடத்துவதற்காக சிறிலங்கா கடலோரக் காவல் படையின் தளபதி றியர் அட்மிரல் ஏ.ஏ.ஆர்.ஏ.டயஸ் தலைமையிலான குழுவொன்று புதுடெல்லி சென்றுள்ளது. 

நேற்றுமுன்தினம் புதுடெல்லி சென்ற இந்தக் குழுவினர் வரும் 30ம் நாள் வரை அங்கு தங்கியிருப்பர். 

இந்திய கடலோரக் காவல்படைத் தளபதி வைஸ் அட்மிரல் முரளிதரன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் இவர்கள் பேச்சு நடத்தி வருகின்றனர். 

தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான தாக்குதல்கள் குறித்த குற்றச்சாட்டுகள் அதிகரித்துள்ள நிலையில், இருதரப்பு கடல்சார் விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளது. 

இரண்டு கடலோரக் காவல்படைகளுக்கும் இடையில் நடவடிக்கை மட்ட ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்திக் கொள்வது குறித்து இந்தச் சந்திப்பில் முக்கிய கவனம் செலுத்தப்படும் என்று இந்திய பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 
இன்றைய செய்தி - 19, மே 2013 ஞாயிற்றுக்கிழமை
சனிக்கிழமை வெள்ளிக்கிழமை
வியாழக்கிழமை புதன்கிழமை
செவ்வாய்க்கிழமை திங்கட்கிழமை

 

 
 
Swiz Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark
USA UK Switzerland Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark