படிப்பறிவில்லாத பிள்ளையான் இனிமேல் கிழக்கு மாகாண முதல்வராக முடியாது என்று அவரது முன்னாள் கூட்டாளியும், சிறிலங்காவின் பிரதி அமைச்சருமான கருணா எனப்படும் முரளிதரன் தெரிவித்துள்ளார்.கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் தனது சகோதரி ருத்ரமலர் ஞானபாஸ்கரனுக்கு ஆதரவாக - வாழைச்சேசையில் பரப்புரைக் கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“2008ம் ஆண்டு நடந்த மாகாணசபைத் தேர்தலில் நான் போட்டியிட முடியாது போனதால் தான் பிள்ளையானால் முதல்வராக முடிந்தது.
பிள்ளையான் முதல்வராகத் தகுதியானவர் அல்ல. அவர் படிப்பறிவற்றவர்.
அவரது முதல்வர் பதவிக்காலம் முடிந்து விட்டது. இம்முறை அவரால் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வெற்றிபெற முடியாது.
இந்தத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் போட்டியிடும் எனது சகோதரியே, முதல்வர் பதவிக்குப் பொருத்தமானவர்.
பிள்ளையானை விட அவரே முதல்வர் பதவிக்கு மிகவும் பொருத்தமானவர்.
அவர் வெற்றிபெற வேண்டு ம். படிப்பறிவில்லாத பிள்ளையானை மீண்டும் அதிகாரத்துக்கு வரவிடக் கூடாது” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.