|
(1) கிழக்கு மாகாணத்தில் வாழும் மூவின மக்களும் தனது குடும்ப ஆட்சிக்கு ஆதரவாக இருகிறார்கள் என்பதை பன்னாட்டு சமூகத்துக்கு எண்பித்துக் காட்ட விரும்புவார்.
(2) மாகாணசபைகளுக்கு 13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் பகிரப்பட்டுள்ள காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களை மீளப்பெற்று மத்திய அரசிடம் ஒப்படைத்துவிட்டு வடக்கு மாகாணத் தேர்தலை நடத்தும் திட்டத்தை நடைமுறைப் படுத்துவார்.
(3) தமிழ் மக்களுக்கு ஓர் அரசியல் தீர்வை வழங்க வேண்டிய தேவையில்லை அவர்களுக்கு வேண்டியது அபிவிருத்தி மட்டுமே எனச் சொல்லுவார்.
(4) வட கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் மரபுவழி வாழ்விடங்களாக இருந்து வருகிறது. ஆனால் இம் மாகாணங்களின் இனப்பரம்பலை முற்றாக மாற்றியமைக்கும் விதத்தில் சிங்களக் குடியேற்றங்கள் முன்னரைவிட வேகமாக முடுக்கிவிட முனைவார்.
(5) வட - கிழக்கை இராணுவ மயப்படுத்தி, சிங்கள மயப்படுத்தி பவுத்த மயப்படுத்தி இலங்கையை ஒரு சிங்கள - பவுத்த நாடாக்கும் திட்டத்தை மகிந்த இராசபக்சே துரிதப்படுத்துவார்.
தமிழ்மக்களைப் பொறுத்தளவில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ஆளும் கட்சியை தோற்கடிக்குமாறு திரு இரா சம்பந்தன் தமிழ்ப் பேசும் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இனச் சிக்கலுக்கு மாகாண சபை தீர்வாக மாட்டாது என்பது ததேகூ இன் நிலைப்பாடாக இருந்தாலும் காணி அதிகாரம் எமது கையில் இருப்பது எமது மண் பறிக்கப்படுவதை ஓரளவேனும் தடுத்து நிறுத்த உதவும். அண்மையில் தனியார் காணிகளைப் பறிக்க நகர மற்றும் நாட்டுத் திட்ட சட்டத்தில் அரச கொண்டு வந்த சட்ட திருத்தத்துக்கு ஒன்பது மாகாணங்களின் ஒப்புதல் வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கிழக்கு மாகாண சபை சம்மதம் கொடுக்க வட மத்திய மாகாணம் சம்மதம் கொடுக்க மறுத்துவிட்டதால் அந்தச் சட்ட திருத்தம் கைவிடப்பட்டது நினைவிருக்கலாம்.
எப்பாடு பட்டும் கிழக்கு மாகாணத் தேர்தலில் வெற்றி பெற்றுவிட வேண்டும் என்ற வெறியுடன் அரசு தனக்குள்ள அதிகாரம், பொருள்வளம், ஆட்பலம் எனச் சகல வளங்களையும் பயன்படுத்துகிறது. ததேகூ வேட்பாளர்களுக்கு மிரட்டல் விடுத்தல், 2,000 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனங்கள் வழங்கல், அபிவிருத்தித் திட்டங்களைத் தொடங்கல், வேலை வாய்ப்பு தரப்படும் என ஆசை வார்த்தை பேசுதல் போன்ற தேர்தல் முறைகேடுகளில் சிறீலங்கா அரசு ஈடுபட்டுள்ளது.
தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதறடிப்பதற்கு பல சுயேட்சைக் குழுக்களையும் ஆளும் கட்சி களமிறக்கியுள்ளது.
இருந்த போதும் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் ததேகூ இந்தத் தேர்தலில் வெற்றி பெறச் செய்வது தமிழ்வாக்காளர்களது தலையாய கடமையாகும். ததேகூ வெற்றிபெறும் போது அது தமிழ்மக்களின் அரசியல் வேட்கைகளை உள்ளடக்கியதும் தமிழ்மக்கள் தங்கள் சொந்த நிலத்தில் தங்களைத் தாங்களே ஆளக் கூடியதுமான ஒரு நிரந்தரமான, நியாயமான, நிலைத்து நிற்கக் கூடிய அரசியல் தீர்வைக் காணவேண்டும் என்ற ததேகூ இன் நிலைப்பாட்டுக்கு வலு சேர்க்கும்.
வட - கிழக்கு இணைப்பை முஸ்லிம் மக்களும் ஏற்றுக் கொள்ள வழிவகுக்கும் வகையில் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் வழங்கப்போகும் தீர்ப்பு அமைய வேண்டும். அதனையே பன்னாட்டு சமூகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.
அரசின் உள்நோக்கம் எதுவாக இருந்தாலும் தமிழ் மக்கள் ததேகூ இன் பின்னால் அணிதிரண்டுள்ளார்கள் என்பதை தேர்தல் முடிவு பன்னாட்டு இராசதந்திரிகளுக்கு வெளிப்படுத்த வேண்டும்.
ததேகூ அரசோடு மோத விரும்பவில்லை. அதே சமயம் ஏமாற்றப்படவும் அர்த்தமற்ற முடிவுகளையோ தீர்வுகளையோ ஏற்றுக் கொள்ளவும் அதன் தலைமை தயாராக இல்லை. இதனை ததேகூ உள்நாட்டிலும் பன்னாட்டு சமூகத்துக்கும் தெளிவாக எடுத்துச் சொல்லிவருகிறது. கிழக்கு மாகாணத் தேர்தலில் பெறும் வெற்றி ததேகூ இன் நிலைப்பாட்டுக்கு வலு சேர்க்கும்.
மேலும் அய்.நா. மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்துக்கு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் ததேகூ பெறும் வெற்றி வலுவூட்டும்.
எனவே ததேகூ கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற வைக்கும் பொறுப்பு கனடிய தமிழர்களது தோள்களிலும் உண்டு. மனிதவளம், பொருள்வளம் என்று வரும்போது அரசோடு ததேகூ போட்டி போட முடியாது. இருந்தும் நாம் ததேகூ இன் கைகளை பல வழிகளில் பலப்படுத்தலாம். அதன் வெற்றிக்குப் பாடுபடலாம். இந்த வரலாற்றுக் கடமையைச் செய்யுமாறு தமிழ்மக்களை அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
நன்றி.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (கனடா)
கனடிய தமிழர் பேரவை
தொடர்பு: 416 281 1165, 647 209 4100, 416 877 8409, 647 300 1973, 416 303 4360
|