Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
சிறிலங்காவுக்கு எதிரான கடுமையான முடிவுகளை எடுக்கப் போகிறது இந்தியா - கொழும்பு ஆங்கில ஊடகம்
Wednesday 22nd of August 2012 03:52:57 PM

அடுத்த சில வாரங்களில் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா கடுமையான பல முடிவுகளை எடுக்கும் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று எதிர்வு கூறியுள்ளது.கொழும்பில் கலாசார மையம் அமைப்பதற்காக இந்தியா கொள்வனவு செய்யவிருந்த நிலம் சீனாவுக்கு விற்கப்பட்ட விவகாரம் இந்தியாவுக்கு கடும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இதையடுத்து இந்தியா உடனடியாகவே சிறிலங்காவுக்குப் பதிலடி கொடுத்தது. 

இந்தமாதம் 24ம் நாள் புதுடெல்லிக்கு வரவிருந்த சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க ஆகியோருடனான சந்திப்புகளை நிறுத்தியது. 

அத்துடன் சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியாங் குவாங்லி வரும் 27ம் நாள் சிறிலங்காவுக்கு வரவுள்ளதும் இந்தியாவுக்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்தநிலையில், சில வாரங்களில் சிறிலங்காவுக்கு எதிராக இந்தியா கடுமையான முடிவுகளை எடுக்கவுள்ளது என்று கொழும்பு ஆங்கில ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.

 
இன்றைய செய்தி - 22, மே 2013 புதன்கிழமை
செவ்வாய்க்கிழமை திங்கட்கிழமை
ஞாயிற்றுக்கிழமை சனிக்கிழமை
வெள்ளிக்கிழமை வியாழக்கிழமை

 

 
 
Swiz Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark
USA UK Switzerland Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark