ஈலிங் கனகதுக்கை அம்மன் கோவிலில் பரிதாபகரமாக ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். அதற்கு நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் என்று கோவில் நலம்விருப்மிகள்வேண்டுகோள் விடுத்துள்ளனர் ஓகஸ்ட் மாதம் வெள்ளிக்கிழமை 17ஆந்திகதி பட்டப்பகலில் கோவிலுக்கு உள்ளோ அல்லது கோவிலுக்கு முன்புறமாகவோ ஒரு தமிழ் உறவு அராகஜமாக தாக்கப்பட்டுள்ளார் இந்த தாக்குதல் நடந்த பொழுது ஐந்து வருடங்களாக முக்கிய பதவியில் இருக்கும் ஒரு நிர்வாக சபை உறுப்பினர் கோவிலுக்குள் இருந்தும் இந்த அசம்பாவிதம் நடந்தது வேதனைக்குரிய விடயம் .
இருபத்தையாயிரம் மக்கள் அம்மனை தரிசப்பதற்கு ஒன்று சேர்ந்தது நீங்கள் அறிந்ததே பதவி ஆசை பிடித்த இப்படியான பொறுப்பற்ற மனிதர் எங்கள் கோவிலுக்கு தேவையா என்று மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள். வேதனைக்குரிய விடயம் என்னவென்றால் மேற்றப்போலின் போலீஸ் விடயம் அறிந்து தலத்துக்கு சென்ற போது சரியான விளக்கத்தை தெரிவிக்க நிர்வாகம் தவறிவிட்டது நிர்வாகம் காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வில்லையாம் அதனால் அங்கு வழிபாட்டுக்கு வந்த பொது மக்களையும் குருமார்களையும் வேறு வழியின்றி காவல் துறையினர் அழைத்து
சென்று தடுத்து வைத்து விசாரணையின் பின் விடுவித்துள்ளனர்.
பொறுப்பற்ற அந்த அங்கத்தவரினால் கோவிலையும் பூட்டி குருமார்களையும் கைது செய்தது மன்னிக்க முடியாத குற்றம் இதற்கு தற்போதைய நிர்வாகத்திலுள்ள சம்பவம் நடந்தபோது கோவிலில் பொறுப்பாயிருந்த பொறுப்பற்ற அந்த நிர்வாகி உடனடியாக விளக்கம் தரமாட்டாரா என்று கோவில் நலன் விரும்பிகள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். இப்படியான மனிதர்களினால் எங்கள் ஆலயத்தின் நற்பெயருக்கு பங்கம் வரக்கூடாது என்ற எண்ணத்துடன் அறங்காவல் சபையினர் தற்போதைய நிர்வாகத்தினருக்கு ஆலயத்தை தங்களிடம் ஒப்படைக்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர் .
தாக்கப்பட்ட தமிழ் உறவு முதலில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தன. பிந்தி கிடைத்த செய்திகளின் படி அவர் உயிர் ஆபத்திலிருந்து மீண்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. யார் இந்த குற்றம் புரிந்தாரோ அவர் தானாகவே முன்வந்து குற்றத்தை ஒப்புக்கொண்டு கோவிலின் நற்பெயருக்கு தீங்கு விளைவிக்காமல் இருப்பார் என்று நம்புகிறோம். குற்றம் புரிந்தவர்கள் தங்கள் குற்றத்தை ஒப்புக்கொள்ள விட்டால் தாக்கப்பட்டவரின் சாட்சியத்தாலும் வீடியோவின் பதிவிலுள்ளவையும் அதிக பட்ச தண்டனை அடைய நேரிடும் என்றும் அன்று கைது செய்யப்பட்டவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
பிந்தி கிடைத்த செய்திகளின் படி அறங்காவல் சபை கோவிலை தங்களிடம் ஒப்படைக்கும்படி நோட்டீஸ் கொடுத்திருந்தார்கள். ஆனால் அதை அவமதித்து தாங்கள் ஒப்படைக்கமாட்டோம் என்று நிர்வாக சபை தலைவர் ராமச்சந்திரனும் காரியதரிசியும் மறுப்பு கடிதத்தை அறங்காவல் சபையிடம் ஒப்படைத்துள்ளதாக அறங்காவல் சபை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்
இதன் பின்னணி என்ன ஏன் இப்படி இவர்கள் செயற்படுகிறார்கள் எது எப்படியிருந்தாலும் குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும். இதற்கு பொறுப்பாயுள்ள அந்த பெரிய மனிதர் வெளியே வரவேண்டும்