Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
அறவாணர் சாதனை விருது வழங்கும் விழா சென்னை இலயோலா கல்லூரி
Thursday 16th of August 2012 02:32:49 PM

சென்னையில் இயங்கிவரும் அறவாணர் அறக்கட்டளை நிறுவனம், தமிழ் இனம், மொழி, பண்பாடு ஆகிய துறைகளில் தொடர்ச்சியாகப் பணியாற்றி வருபவர்களை இனம் கண்டு விருது வழங்கி வருகின்றது.உலகெங்கும் வாழும் தமிழ் மக்களை பெருமைப்படுத்தும் இந்த விருது விழா ஆண்டுதோறும் அறவாணர் அறக்கட்டளையால் கடந்த 12 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.அந்தவகையில் அறவாணர் சாதனை விருது வழங்கும் விழா சென்னை இலயோலா கல்லூரி அரங்கில் ஆகஸ்ட் 4, 2012 சனிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு ஆரம்பமாகி சென்னை எஸ். ஆர். எம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் மு. பொன்னவைக்கேர் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

2011ம் ஆண்டுக்கான அறவாணர் விருதுகள்; திரு. பழ. நெடுமாறன் (தலைவர் உலகத்தமிழர் பேரமைப்பு), திரு. இரா. முத்துக்குமாரசாமி (இயக்குனர் - சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்), திரு. சு. இராசரத்தினம் (தலைவர் - Active Brain Center Canada) ஆகியோருக்கு வழங்கிப் பாராட்டப்பட்டன.

மேற்படி விருது வழங்கும் விழாவில், கனடாவில் வாழும் ஈழத்தமிழரான திரு. சுப்பிரமணியம் இராசரத்தினம் அவர்கள் சிறப்பிக்கப்பட்டது, குறிப்பிடத்தக்கது.

இவர் தமிழ்மொழி கற்றல், கற்பித்தலில் தொடர்ந்து பணியாற்றி வருபவர் என்பதும், தமிழீழம் - நாடும் அரசும், பண்பாடு � வேரும் விழுதும் என்னும் நூல்களை எழுதியவர் என்பதும் இதில் பண்பாடு � வேரும் வழுதும் என்னும் நூல் 2008ம் ஆண்டுக்கான சிறந்த நூலுக்கான தமிழக அரசின் விருதினைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 
இன்றைய செய்தி - 22, மே 2013 புதன்கிழமை
செவ்வாய்க்கிழமை திங்கட்கிழமை
ஞாயிற்றுக்கிழமை சனிக்கிழமை
வெள்ளிக்கிழமை வியாழக்கிழமை

 

 
 
Swiz Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark
USA UK Switzerland Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark