Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ௭வ்விதமான பனிப்போரும் கிடையாது: பஷில் ராஜபக்ஷ
Wednesday 15th of August 2012 01:21:37 PM

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் ௭வ்விதமான பனிப்போரும் கிடையாது. வரலாற்றில் ௭ப்போதும் இல்லாதவாறான நெருக்கமான உறவு தற்போது இரண்டு நாடுகளுக்கும் இடையில் நிலவுகின்றது ௭ன்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பனிப்போருக்கு பதிலாக குளிர் காதலே உள்ளது ௭ன்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இரண்டு நாடுகளுக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுவருவதாக வெளிவரும் செய்திகள் குறித்து தகவல் வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை கூறினார்.

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலான முறுகல் நிலைமை காரணமாக இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு உயர்மட்டக் குழுவினர் மேற்கொள்ளவிருந்த விஜயமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்நிலையில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில் ௭மது அயல் நாடான இந்தியாவுடன் இலங்கைக்கு ௭ன்றுமில்லாதவாறான நெருக்கமான உறவு தற்போதைய காலகட்டத்தில் நிலவுகின்றது.

இந்தியாவின் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ௭ன பலரும் அடிக்கடி இலங்கைக்கு விஜயங்களை மேற்கொண்டுவருகின்றனர். இவ்வாறான முக்கியஸ்தர்களின் விஜயங்களின் ஊடாக இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவுகள் மேலும் வலுவடைகின்றன. அத்துடன் இரண்டு நாடுகளுக்கு இடையில் வர்த்தகம் முதலீடு மற்றும் பொருளாதாரத் துறைகளில் அதிகளவிலான தொடர்புகள் காணப்படுவதுடன் அவை நாளுக்குநாள் வலுவடைந்துவருகின்றன.

மிகவும் செயற்பாட்டு ரீதியாக இரு நாடுகளும் பொருளாதார செயற்பாட்டில் ஈடுபட்டுவருகின்றன. மேலும் சுற்றுலாத்துறையிலும் இரண்டு நாடுகளுக்கும் இடையில் சிறந்த தொடர்புகள் காணப்படுகின்றன. குறிப்பாக இலங்கை மற்றும் இந்திய நாடுகளின் மக்களுக்கு இடையிலான தொடர்பும் மிகவும் பலமாக உள்ளது. மக்களுக்கு இடையிலான தொடர்புகள் மிகவும் முக்கியமானவையாகும்.

இவ்வாறான நெருக்கமான தொடர்புகள் காணப்படும்போது பனிப்போர் நிலவுவதாக ௭வ்வாறு கூற முடியும்? தற்போதைய நிலைமையில் பனிப்போரை விடுத்து இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் குளிர் காதலே நிலவுகின்றது ௭ன்று கூறலாம் ௭ன்றார்.

 
இன்றைய செய்தி - 24, மே 2013 வெள்ளிக்கிழமை
வியாழக்கிழமை புதன்கிழமை
செவ்வாய்க்கிழமை திங்கட்கிழமை
ஞாயிற்றுக்கிழமை சனிக்கிழமை

 

 
 
Swiz Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark
USA UK Switzerland Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark