உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் தேசியசெயற்திட்ட அமுலாக்கம் சாத்தியமாகும் என தாம் கருதவில்லை என முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு பரிந்துரைகளை அரசாங்கம் ஒருபோதும் விரும்பவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.சர்வதேச சமூகத்தை திருப்தி படுத்தும் நோக்கிலேயே இந்த ஆணைக்குழு நிறுவப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வடக்கு இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளதாக உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு பரிந்துரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகக்குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் இராணுவத்தின் பிரசன்னத்தை குறைக்க தேசியசெயற் திட்டங்களை அமைக்க வேண்டிய அவசியமில்லை, தேவை என்றால் உடனடியாக குறைக்கமுடியும் என அவர் தெரிவித்துள்ளார். நடவடிக்கைகளை உரிய நேரத்தில் எடுக்காது அவற்றுக்கு கால அவகாசம் கோருவது பொருத்தமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜெனீவா பிரதிநிதிகளை திருப்தி படுத்தும்நோக்கில் நாட்டை ஆட்சி செய்ய முடியாது எனவும் அதில் தமக்கு உடன்பாடு கிடையாது எனவும் அவர்குறிப்பிட்டுள்ளார்.