இஸட்புள்ளி மீள்கணிப்பீட்டின் பின்னர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு மாணவர்களிடமிருந்து 1675 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவ்வாணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.முந்தைய இஸட்புள்ளி பட்டியல் செல்லுபடியற்றதான உயர் நீதிமன்றம் தெரிவித்த பின்னர் அப்பட்டியலை அதிகாரிகள் பின்பற்ற முடியாதென இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் பிரதீபா மஹாநாம கூறினார்.
நீதிமன்ற தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டிய அவர், இஸட் புள்ளி மீள் கணிப்பின் பின்னர் ஏமாற்றமடைந்த மாணவர்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, சட்டமா அதிபருடன் கலந்துரையாடுமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் மனித உரிமைகள் ஆணைக்குழு கோரியிருப்பதாக அவர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரையும் உள்ளீர்ப்பதற்காக, அடுத்த வருடம் பல்கலைக்கழகததிற்கு சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை 3000 பேரினால் அதிகரிகப்படும் என உயர்கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுனில் நவரட்ண முன்னர் கூறினார்.
எனினும் இது குறித்து தம்முடன் கலந்துரையாடப்படவில்லை என உபவேந்தர்கள் குழு தெரிவித்துள்ளது.