Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
எந்தவொரு இராணுவமும் மக்களுக்காக இந்தளவு தைரியத்துடன் செயற்பட்டதில்லை - கோதபாய
Sunday 29th of July 2012 11:48:20 AM

எந்தவொரு இராணுவமும் இந்தளவிற்கு மக்களுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றியதில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷதெரிவித்துள்ளார். மிக நீண்ட காலமாக இடம்பெற்ற யுத்தத்தின் பின்னர் இலங்கை இராணுவத்தினர் மக்களுக்காக பாரியளவில் சேவைகளை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.12000 முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைந்த போது அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனிப்பட்ட ரீதியில் உத்தரவிட்டதாக கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மன்னார் கந்தன்குளம் பகுதியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் எந்தவொரு இராணுவமும் மக்களுக்காக இந்தளவு தைரியத்துடன் செயற்பட்டதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தத்தின் பின்னர் 101 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் வன்னிக்கு விஜயம் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். பிரதேசத்தின் நிலைமைகளை நேரில்பார்வையிடுவதற்கு அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

புனரமைப்பு பணிகளில் உலகின் பல நாடுகள் ஆர்வம்காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

 
இன்றைய செய்தி - 19, மே 2013 ஞாயிற்றுக்கிழமை
சனிக்கிழமை வெள்ளிக்கிழமை
வியாழக்கிழமை புதன்கிழமை
செவ்வாய்க்கிழமை திங்கட்கிழமை

 

 
 
Swiz Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark
USA UK Switzerland Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark