Please enable Javascript in your brower's setting to view this page properly.

Tamil's Guide

Canada:

(Toronto)

UK:

(London)

Australia:

(Sydney)

Srilanka:

(Colombo)

Home இதை எனது முதல் பக்கமாக்கு தமிழன் வழிகாட்டி INFORMATION PAGE
 
 

 

 
வடக்கில் படையினரால் பாலியல் வன்முறைகள் புரியப்பட இல்லையாம்
Tuesday 24th of July 2012 03:27:00 PM

இலங்கையில் போர் முடிவுக்கு வந்த சூழ்நிலையில் அவசரகால சட்டம் போன்ற கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமையால் தான் குற்றவாளிகள் தடையின்றி செயற்படுவதாக பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.குற்றச்செயல்கள் பற்றிய செய்திகள் வெளியிடப்படுகின்ற முறையால்தான் நாட்டில் தொடர் குற்றச்செயல்கள் அதிகரிக்கும் போக்கு காணப்படுவதாக கருத்துக்கள் வளர்ந்துவருவதாகவும் அது தவறு என்றும் கோட்டாபய கூறியுள்ளார்.

குற்றச்செயல்களும் தேசியப் பாதுகாப்பும் என்ற தொனிப்பொருளில் நேற்று திங்கட்கிழமை காலை அரசின் தகவல் திணைக்களத்தில் நடந்த கருத்தரங்கில் பேசிய பாதுகாப்புச் செயலாளர், வடக்கில் பாதுகாப்புப் படையினரால் எந்தவொரு பாலியல் வன்முறைகளும் புரியப்பட்டதாக தகவல்கள் இல்லை என்றும் கூறினார்.

ஆனால் விடுதலைப் புலிகளின் காலத்தில் உயிரிழந்த பெண்களை படையினரே பாலியல்கொடுமைகளுக்கு உள்ளாக்கி கொன்றதாக வெளிநாட்டவர்களுக்கு தவறாக தகவல்கள் பரப்பப்பட்டுள்ளதாகவும் கோட்டாபய தெரிவித்துள்ளார்.

நாட்டில் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்தக்கூடிய அளவுக்கு இராணுவத்துக்கு போதிய அதிகாரங்கள் இல்லாமல் இருப்பதாகவும் அதுதான் பல பிரச்சனைகளுக்கு காரணம் என்ற தொனியிலும் கோட்டாபய ராஜபக்ஷ பேசியிருக்கிறார்.

இதேவேளை இலங்கையில் குற்றச்செயல்கள் அதிகரித்துவருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டிவருகின்றனர். ஹம்பாந்தோட்டை மாவட்டம், கட்டுவன பிரதேசத்தில் இன்று காலையும் ஆணொருவர் மற்றும் பெண்ணொருவரின் சடலங்கள் மீட்கப்பட்டன.

மரத்தில் தொங்கிய நிலையில் காணப்பட்ட இந்த சடலங்களில் வெட்டுக்காயங்கள் காணப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன. இதே கட்டுவன பிரதேசத்தில் தான் கடந்த மாதத்தில் ஜேவிபியினரின் கூட்டத்தில் நடந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் இரண்டுபேர் கொல்லப்பட்டனர்.

இதேவேளை, அண்மையில் இரத்தினபுரி மாவட்டம் காவத்தைப் பகுதியில் ஒரு தாய் மற்றும் மகளின் சடலங்கள் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன. இதே பிரதேசத்தில் இதற்கு முன்னரும் இரண்டு வயோதிப பெண்கள் கொல்லப்பட்டிருந்தனர். அதற்கு முன்னரும் அப்பகுதியில் பல கொலைச்சம்பவங்கள் மர்மமான முறையில் நடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 
இன்றைய செய்தி - 20, ஜுன் 2013 வியாழக்கிழமை
புதன்கிழமை செவ்வாய்க்கிழமை
திங்கட்கிழமை ஞாயிற்றுக்கிழமை
சனிக்கிழமை வெள்ளிக்கிழமை

 

 
 
Swiz Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark
USA UK Switzerland Srilanka Singapore Malaysia India Germany France Canada Australia Norway Newzeland Netharland Denmark