Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

உலகச் செய்திகள்

அமெரிக்காவில் ஒலிபரப்பைத் தொடங்கிய ரஷ்யாவின் ஸ்புட்னிக்!

Sunday 16th Jul 2017 06:38 AM

Russia's Sputnik started broadcasting in the United States

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் ரஷ்யாவின் ரேடியோ ஸ்புட்னிக் தனது பண்பலை ஒலிபரப்பைத் தொடங்கியுள்ளது.

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் உள்ள ரஷ்யத் தூதரக அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தினர், ரஷ்ய மக்கள் ஆகியோரின் வசதிக்காக ரேடியோ ஸ்புட்னிக் தனது பண்பலை ஒலிபரப்பைத் தொடக்கியுள்ளது.

ஆங்கிலச் செய்தி அறிக்கை, இணையதள செய்திகள் ஆகியவை வாஷிங்டனில் உள்ள ஆசிரியர் குழுவால் தயாரிக்கப்படுகின்றன. இவை தவிர செய்தியின் பல்வேறு கோணங்கள், பார்வைகள் இடம்பெறும் விவாதமும் இடம்பெறுகின்றன.

ஒரு நாளில் 7 மணி நேர நிகழ்ச்சி நிரல் அமெரிக்காவிலும் மீதி ரஷ்யாவிலும் இருந்து தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பப்படுகின்றன. இந்த ஒலிபரப்பின் மூலம் அமெரிக்க செய்தியாளர்கள் 40பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைத்துள்ளது. இந்த ஒலிபரப்புக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து இதை விரிவாக்கும் திட்டமுள்ளதாக ரேடியோ ஸ்புட்னிக்கின் ஆசிரியர் மிண்டியா கவாசெலி தெரிவித்துள்ளார்.