Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

உலகச் செய்திகள்

அமெரிக்காவில் மருத்துவ துறையில் நிகழ்ந்த மிகப்பெரும் முறைகேடால் 400 பேர் அதிரடியாக கைது!

Sunday 16th Jul 2017 06:36 AM

400 people arrested seriously in the medical field

அமெரிக்காவில் நோயாளிகளுக்கு  அளவுக்கு அதிகமான வலி நிவாரணி மருந்துகளை மருத்துவர்கள் பரிந்துரைப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்த 120 மருத்துவர்கள், மருத்துவ காப்பீட்டு நிறுனவத்தை சேர்ந்தவர்கள், மருந்து நிறுவனங்களை சேர்ந்தவர்கள் என்று  400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வலி நிவாரணி மாத்திரைகளை பரிந்துரைப்பது, மருந்து நிறுனவங்கள் போலி பில் தயாரித்து காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து பணம் பெறுவது என  தொடர்ந்து அமெரிக்காவில் மருந்து துறையும், மருத்துவர்களும் இணைந்து நடத்தும் முறைகேடுகள் அம்பலமாகி உள்ளன. 83 லட்சம் கோடி ரூபாய்க்கு மருந்து ஊழல் அமெரிக்காவில் நடைபெற்றிருப்பதாக அதிரச்சி தகவலும் வெளியாகி உள்ளது. வலி நிவாரணி மருந்து ஒரு கால கட்டத்தில்  போதைப்பொருளாக நோயாளிகளுக்கு மாறும் அபாயம் இருப்பதும், வலி நிவாரணி மாத்திரைகள் உட்கொள்வதால் நாள் ஒன்றுக்கு 91 அமெரிக்கர்கள் உயிரிழப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது. 

இதையடுத்து அதிகளவில்  நோயாளிகளுக்கு மருத்துவர்கள் இத்தகைய மருந்துகளை  பரிந்துரைப்பதும் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் அட்டர்னி ஜெனரல் செஷன், அதிபர் ட்ரம்ப் மருந்து முறைகேடுகளை கலைவதில் தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் அதனடிப்படையில் புளோரிடா, லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். ஒபாமாவின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை  ரத்து செய்து விட்டு புதிய காப்பீட்டு திட்டத்தை அமெரிக்க நாடாளுமன்றத்தில் ட்ரம்ப கொண்டு  வர முயற்சிகள் நடைபெறுவதும் அதற்கு எதிர்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இத்தகைய மருத்துவ முறைகேடு அம்பலமாகி இருப்பது அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.