Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இலங்கைச் செய்திகள்

தலவாக்கலை ஒலிஷரூட் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக தொழிலாளர்கள் ஆர்பாட்டம்.

Tuesday 12th Sep 2017 16:52 PM

தொழிற்சாலைக்கு முன்பாக நடத்தப்பட்டது

தலவாக்கலை ஒலிஷரூட் தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக தொழிலாளர்கள் ஆர்பாட்டம்.

.
.ஒலிஷரூட் தோட்ட நிர்வாகம் தேயிலை தோட்டங்களை காடுகளாக்கி சுத்தம் செய்ய நடவடிக்கைகளை எடுக்காது 18 கிலோவுக்கு அதிகமான தேயிலை கொழுந்தினை கொய்து தரும்படி வழியுறுத்துவதனால் ஏற்பட்ட முறுகள் நிலையை முன்னிருத்தி இந்த ஆர்ப்;பாட்டம் காலை 09 மணியளவில் தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக நடத்தப்பட்டது.இந்த விடயத்தில் தோட்ட நிர்வாக அதிகாரிக்கும், தொழிலாளர்களுக்கும் இடையில் வாக்குவாதமும் முறுகள் நிலையும் தோன்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இத் தோட்டத்தின் தேயிலைக்காணிகள் பல நல்ல தேயிலை விளைச்சலை தரக்கூடியது ஆனால் தோட்ட நிர்வாகம் இந்த தேயிலை நிலங்களை சுத்தம் செய்து கொடுபதில் அக்கரை காட்டுவதில்லை.இருந்தும் இவ்வாறான நிலையில் நாளொன்றுக்கு 18 கிலோவுக்கு அதிகமாக தோட்ட நிர்வாக அதிகாரி தேயிலை கொழுந்தை கொய்து தரும்படி வழியுறுத்துகிறார். இதனால் தாம் போராட்டத்தை முன்னெடுத்ததாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.