Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

இலங்கைச் செய்திகள்

சிறிதரனுக்கு ஆதரவளிக்கப்போவதில்லை – மலையக மக்கள்!

Monday 17th Jul 2017 18:37 PM

இனிவரும் காலங்களில்

இனிவரும் காலங்களில் சிறிதரனுக்கு ஆதரவளிக்கப்போவதில்லை – மலையக மக்கள்!

இனிவரும் காலங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு தாம் எந்தவிதத்திலும் ஆதரவு தெரிவிக்கப்போவதில்லையென மலையக மக்கள் சார்பான பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மலையக மக்களை வடக்கத்தையான் எனக் கீழ்த் தரமாக உரையாடிய ஒலிவடிவம் ஒன்று வெளியாக சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இன்று மலையக மக்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து இச்சம்பவம் தொடர்பாகக் கலந்துரையாடினார்.

இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட மலையக மக்கள் தாம் எஸ்ரேட் பகுதியிலிருந்து வன்முறைகளுக்கு முகங்கொடுத்தே இங்கு குடியேறியதாகவும், தமது வாக்கினாலேயே சிறிதரன் நாடாளுமன்றம் சென்றார் எனவும் தெரிவித்த அவர்கள், இவரது வார்த்தைப் பிரயோகம் தமக்கு மிகுந்த கவலையளிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் இதனை மறுத்துள்ளதுடன், இதற்குள் உட்செருகல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளதுடன், இதனை உறுதிப்படுத்தினால் தான் உடனடியாகப் பதவி விலகுவதாக அம்மக்களுக்குத் தெரிவித்தார்.