Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

சினிமா செய்திகள்

6 ஆண்டுகளுக்கான மாநிலத் திரைப்பட விருது : தமிழக அரசு

Sunday 16th Jul 2017 06:53 AM

6 Years Film Awards!

2009ம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரையில் 6 ஆண்டுகளுக்கான மாநிலத் திரைப்பட விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. 

2009-ஆம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் திரைப்படமாக "பசங்க" படம் தேர்வாகி உள்ளது. இதேபோல் 2010-ல் மைனாவும், 2011-ல் வாகை சூடவாவும், 2012-ல் வழக்கு எண் 18ன் கீழ் 9ம், 2013-ல் ராமானுஜன் திரைப்படமும், 2014-ல் குற்றம் கடிதல் திரைப்படமும் தேர்வாகி உள்ளது. 

2009-ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகராக மலையன் படத்தில் நடித்த கரண் தேர்வாகி உள்ளார். இதேபோல் 2010-ல் ராவணன் படத்தில் நடித்த விக்ரமும், 2011-ல் வாகை சூடவா படத்தில் நடித்த விமலும், 2012-ல் நீ தானே பொன் வசந்தம் படத்தில் நடித்த ஜீவாவும், 2013-ல் ராஜா ராணி படத்தில் நடித்த ஆர்யாவும், 2014-ல் காவியத்தலைவன் படத்தில் நடித்த சித்தார்த்தும் தேர்வாகி உள்ளனர்.  

 இதேபோல் 2009-ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகையாக பொக்கிஷம் படத்தில் நடித்த பத்மப்ரியா தேர்வாகி உள்ளார். 2010-ல் மைனா படத்தில் நடித்த அமலா பாலும், 2011-ல் வாகை சூடவா படத்தில் நடித்த இனியாவும், 2012-ல் கும்கி, சுந்தர பாண்டியன் படங்களில் நடித்த லட்சுமி மேனனும், 2013-ல் ராஜா ராணி படத்தில் நடித்த நயன்தாராவும்,  2014-ல் காக்கா முட்டை படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷும் சிறந்த நடிகைகளாக தேர்வாகி உள்ளனர்.  

 2009-ஆம் ஆண்டிற்கான சிறந்த இயக்குநராக அங்காடி தெரு படத்தை இயக்கிய வசந்த பாலன் தேர்வாகி உள்ளார். 2010-ல் மைனா படத்தை இயக்கிய பிரபு சாலமனும், 2011-ல் தெய்வ திருமகள் படத்தை இயக்கிய விஜய்-க்கும், 2012-ல் வழக்கு எண் 18ன் கீழ் 9 படத்தை இயக்கிய பாலாஜி சக்திவேலும், 2013-ல் தங்க மீன்கள் படத்தை இயக்கிய ராமிற்கும், 2014-ல் மஞ்சப்பை படத்தை இயக்கிய ராகவனும் சிறந்த இயக்குநர்களாக தேர்வாகி உள்ளனர்.  

இந்நிலையில் மறைந்த பாடலாசிரியர் முத்துக்குமாருக்கு தொடர்ச்சியாக 2012 முதல் 2014-ஆம் ஆண்டுகள் வரை தொடர்ந்து 3 ஆண்டுகள் சிறந்த பாடல் ஆசிரியருக்கான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். தங்க மீன்கள், சைவம் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் எழுதிய பாடல்களுக்காக பாடலாசிரியர் முத்துக்குமார் தேர்வாகி உள்ளார்.