Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

கனேடியச் செய்திகள்

தீவுகளில் சிக்குண்டுள்ள கனேடியருக்கு உதவுக: பல்கலைக்கழக மாணவர்கள் வேண்டுகோள்

Tuesday 12th Sep 2017 07:27 AM

Help the Canadians in the islands of the island: university students request

இர்மா புயல் காரணமாக கரீபியன் தீவுகளில் சிக்குண்டுள்ள கனேடியர்களுக்கு உதவும் வகையில் மேலும் பல நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கனேடிய மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மத்திய அரசர்ங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இர்மா புயல் தாக்குவதற்கு முன்னர் இறுதி தருணத்தில் அங்கிருந்து புறப்பட்ட விமானத்தில் வந்த ஐந்து கனேடியர்களில் தானும் ஒருவர் என்றும், பலரும் அங்கு சிக்குண்டுள்ள நிலையில், இறுதி வேளையில் தனக்கு அநத நல்வாய்ப்பு கிடைத்ததாகவும், அமெரிக்க பல்கலைக்கழகத்தின் கரீபியன் வளாகத்தைச் சேர்ந்த கனேடிய மாணவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தாம் அங்கிருந்து ரொரன்ரோ நோக்கி பயணித்த சண்விங் விமானத்தின் முழு இருக்கைகளும் முன்னரே பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தாம் இறுதி வேளை வரை விமான நிலையத்தில் காத்திருந்ததாகவும், யாரோ வரவில்லை என்ற காரத்தினால் கிடைத்த ஆசனத்தினை பயன்படுத்தி தன்னால் கனடா வர முடிந்ததாகவும் அவர் தனது பயணம் தொடர்பில் விபரித்துள்ளார்.

எனினும் தன்னுடன் அங்கு பயின்ற சுமார் 25 கனேடிய மணவர்கள் அங்கு உள்ளதாகவும், அவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இவ்வாறான நிலையில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கையெப்பம் இட்டு, கனேடிய மத்திய அரசுக்கு கோரிக்கை ஒன்றினையும் அனுப்பியுள்ளதுடன், அங்குள்ளவர்களுக்கான அத்தியாவசிய பொருட்களும் தீர்ந்துவரும் நிலையில், அங்குள்ள கனேடியர்களுக்கு உதவ அரசு மேலதிக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.