Canada
Toronto
UK
London
Australia
Sydney
Sri Lanka
Colombo

கனேடியச் செய்திகள்

திருகோணமலை மண்ணின் வரலாற்றுப் பதிவுகள் "இராவண தேசம்" நூலின் அறிமுக விழா..!

Tuesday 12th Sep 2017 01:35 AM

நூலின் அறிமுக விழா..!

மொன்றியலில் "இராவண தேசம்"
கனடா உள்ளம் நிறுவண அணுசரனையுடன் தாகம் பதிப்பகத்தினால் திருமலையில் வெளியிடப்பட்ட பிரபல ஆய்வாளரும், ஊடகவியலாளருமான திருமலை நவம் எழுதிய இராவண தேசம்- திருகோணமலை மண்ணின் வரலாற்றுப் பதிவுகள் நூலின் அறிமுக விழா..!

ரோம் நகர் இத்தாலியிலிருந்து மொன்றியல் வருகை தந்த திருகோணமலை பாலையூற்றை சேர்ந்த வண பிதா டக்லஸ் ஜேம்ஸ் அடிகளாரை கெளரவிக்குமுகமாக மொன்றியல் திருமலை மக்களின் குறுகிய கால ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட ஒன்றுகூடல் நிகழ்வு மற்றும் இராவண தேசம் நூல் அறிமுக விழாவும் கடந்த 10 - 09 - 2017 அன்று Ganesh party palace மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
மொன்றியல் திருமலை ஒன்றிய செயலாளர் திரு தேவராஜா அவர்களின் இராவண தேசம் நூல் அறிமுகவுரையைத் தொடர்ந்து முதல் பிரதியை வணபிதா டக்லஸ் ஜேம்ஸ் அடிகளார் பெற்றுக்கொண்டார்.